உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அதிகாரம் கைவசம் இருக்கும் போது தலைக்கனம் அதிகரிக்கும்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
94 பார்வைகள்

அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

தாங்கள் தவறு செய்தால் அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், “அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் அதிகரிக்கின்றது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், ‘நமக்கு என்ன நடந்தது?’ எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது. அதிகாரம் இருக்கும் இடத்தில் புத்தி இருப்பதில்லை, புத்தி வரும்போது கையில் அதிகாரம் இருப்பதில்லை” என்று தெரிவித்தார்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போலத் துடிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டிய அவர், கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தமக்கு உண்டு என்றார்.

எதிர்காலத்தில் ஆளும் தரப்பினருக்கு அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டில் நிலவும் வரிச்சுமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று உணவருந்தும்போது கூட அந்த உணவுக்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். வியாபாரிகளுக்குச் செலுத்திய வரியை மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளபோதிலும், சாதாரண நுகர்வோருக்கு அந்த வாய்ப்பு இல்லை என்றார்.

வரிச்சுமையின் தாக்கம் காரணமாக மக்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்ட அவர், திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைக்குச் சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று நகைச்சுவை கலந்த தொனியில் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0