உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

செம்மணிக்கு வந்த கனேடியத் தூதரகத்தின் பிரதிநிதிகள் அரசின் அனுமதி கிடைக்காமையால் திரும்பினர்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
89 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், அரசிடமிருந்து முறையான அனுமதி கிடைக்காத காரணத்தால், சித்துப்பாத்தி இந்து மயான வாயில் வரை வந்துவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இறுதி நாளான 56 ஆம் நாள் அகழ்வு நேற்று முந்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. மதிய உணவு இடைவேளையின் போது கனேடியத் தூதரக அதிகாரிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காகக் கனேடியத் தூதரகம் தரப்பில் உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. எனினும், இலங்கை அரசிடமிருந்து அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை.

அகழ்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு வருகை தருவதாக இருந்தால், முதலில் அரசின் அனுமதியைப் பெற்று நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், கனேடியத் தூதுவராலயத்துக்கு அரசின் அனுமதி கிடைக்காததால், நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாக, செம்மணி வாயில் வரை வருகை தந்த கனேடியத் தூதுவராலயப் பிரதிநிதிகள், அரசின் அனுமதி பெறப்படாத சூழ்நிலையில் புதைகுழிப் பகுதிக்கு செல்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0