யாழ்ப்பாணத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடைக்குத் தீர்வு
யாழில் கடந்த பல நாட்களாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படித்தமையே எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் இவ்வாறு படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றையதினம் வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு சுத்தம் செட்வதன் மூலம் மின்தடை ஏற்படுவதை தடைக்கு முடியும் என தெரிவிக்கப்படுகிறது.




