மன்னாரில் இன்றும் சிறப்பாக இடம்பெற்ற நியூஸிலாந்து மருத்துவக் குழுவின் இலவச மருத்துவ முகாம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் இன்றைய தினம் புதன் கிழமை (19) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் குறித்த இலவச மருத்துவ முகாமை முன்னெடுத்தனர்.
குறித்த மருத்துவ முகாமில் நீரிழிவு நோய் (Diabetes),தைராய்டு (Thyroid) தொடர்பான பிரச்சினைகள்.
பிட்யூட்டரி- (Pituitary) சுரப்பி தொடர்பான, கேபர்கோலின் (Cabergoline) சிகிச்சை தேவைப்படுபவர்கள்,ஆஸ்துமா (Asthma / COPD) (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்). (Breathing Problems) சுவாசப் பிரச்சினைகள்,இரத்த அழுத்தம் (Blood pressure).உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி கண் நோயாளருக்கு வழங்கப்படுகின்றது. குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.
இதன் போது அயல் கிராமங்களில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர்.
மன்னார் உப்புக்குளம்,விடத்தல் தீவு மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட குறித்த இலவச மருத்துவ முகாமில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயணடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.












