உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பிரமந்தனாறு பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
91 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பொதுமக்கள் வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியானது விஸ்வமடு சந்தியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அளவில் புனரமைப்பு செய்யப்பட்டு காபெட் வீதியாக காணப்பட்டிருந்த போதிலும் எஞ்சிய மூன்று கிலோமீட்டர் வீதி புனரமைப்பு செய்யப்படாது 16 வருடங்களுக்கு மேல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக பிரமந்தனாறு, மயில்வாகனபுரம், கல்லாறு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரமந்தனாறு மகா வித்தியாலயம் மற்றும் பிரமந்தனாறு ஆரம்ப சுகாதார வைத்தியசாலை உள்ளிட்ட சேவைகளை பெற முடியாதுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து பாடசாலைக்கு கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க வரும் ஆசிரியர்கள் குறித்த விதியின் ஊடாக பயணிப்பதன் காரணமாக குறித்த நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் வெள்ளம் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடுகின்றர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0