உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசம்.!

இலங்கை செய்திகள் 24 மணி நேரம் முன்
55 பார்வைகள்

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (19) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.

வேப்பங்குளம் காளிகோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள வீட்டில் திடீரென தீப்பற்றியதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அயலவர்களும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஒத்துழைத்துள்ளனர்.

எனினும், தீ விபத்தின் காரணமாக வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

85 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

69 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

77 0 0