குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!
நேற்று செவ்வாய்க்கிழமை (18) மாலை நாஉல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெடில்ல குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து நாஉல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.