உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

100 பார்வைகள்

மாத்தறை – அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயதான லக்மால் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது பணியை முடித்துவிட்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் அவரது உந்துருளி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

லக்மாலின் திருமணப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களும், தொழில் நிமித்தம் இஸ்ரேல் செல்வதற்கு மூன்று நாட்களுமே இருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் தற்போது கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லக்மாலின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி, பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எனினும், சட்ட நடைமுறைகளுக்கு அமைய சந்தேகநபரான பேருந்து சாரதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0