உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கொ*லைகாரர்களிடம் நீதியை எதிர்பார்க்கவில்லை; சர்வதேச மாநாட்டுக்கு அணிதிரளுங்கள்.!

52 பார்வைகள்

எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

எமது உறவுகளை தேடிய போராட்டத்தில் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஐ.நா வரை எமது நீதிக்கான போராட்டத்தை இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ் மக்கள் மீதான கொடூர இன அழிப்பு இடம்பெற்ற பின் எமக்கான நீதியை இலங்கை அரசிடம் பல தடவைகள் எழுத்து மூலமாக கோரினோம் பதில் கிடைக்கவில்லை.

12க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை சந்தித்தோம் எந்தப் பயனும் இல்லாத நிலையில் இலங்கை நீதித்துறை என்பது கொலைகாரர்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தோம்.

அதன் காரணமாக எமது உறவுகளைத் தேடிய போராட்டம் சர்வதேசத்தை நோக்கியதாக மாற்றப்பட்டு ஐ.நா 36 ஆவது கூட்டத் தொடரில் இருந்து எமது உண்மைக்கும் நீதிக்குமான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற உண்மையை சர்வதேசத்தின் வாயிலாக மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகளூடாக எமக்கான நீதியை பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

எமது உறவுகளைத் தேடிய நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

ஆகவே எமது உறவுகளை தேடிய போராட்டத்தின் சர்வதேச மாநாட்டை சிறப்பாக முன்னெடுப்பதற்கு சகல தரப்பினர்களிடமும் ஆதரவை எதிர்பார்ப்பதோடு உதவிகளையும் எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0