கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது.!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.