உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
94 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன் தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை முன்னெடுக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்திடம் கண் முன்னே ஒப்படைக்கப்பட்ட கணவன், குழந்தைகள், உறவுகள் காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போயிருக்கும் உறவுகளைத் தேடி கொண்டிருக்கின்ற காணாமல் போனவர்களின் உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள்.

உண்மையில் இந்த உறவுகளின் போராட்டங்கள் அவர்களுடைய தேடுதலுக்கான நடவடிக்கைகள் தான். இன்றைக்கும் எங்களுடைய தேசத்திலே உலக நாடுகளில் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது.

அது ஒன்று தான் எங்களுடைய தேசத்தின் மீது இன்றைக்கு உலக நாடுகள் தங்களுடைய பார்வையை திருப்புகின்ற ஒரு செயல்பாடாக இருக்கிறது.

செம்மணி மனித புதைகுழி, எங்களுடைய இனத்தினுடைய படுகொலைகள், உயிரோடு புதைக்கபட்டவர்களைத் தோண்டுகின்ற ஒரு மாபெரும் இனத்தினுடைய இந்தப் படுகொலையை நினைவூட்டுகின்ற செயல்பாடாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்ற சூழலிலே, காணாமல் போன, தேடுகின்ற உறவுகளுடைய அந்த உடல்களும் அங்கே இருக்கலாம் என்ற ஒரு சந்தேகத்தோடு இன்றைக்கு எல்லோரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அதைவிட பொதுமக்கள், ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அங்கே புதைக்கப்பட்டிருப்பார்களா? தமிழினத்தை அழிக்க, ஒழிக்க நினைக்கிற இந்த சக்திகள் எந்த அளவுக்கு படுபாதகமான ஒரு செயல்பாட்டை எங்கள் மீது செய்திருக்கிறது என்பதை இன்றைக்கு வெளிப்படையாக தெரிவிக்கிற ஒரு உடைமை என்னவென்றால், அது செம்மணி புதைகுழி என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதன் அடிப்படையில் காணாமல் போனவர்களின் உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள அவர்களுடைய மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை நல்குகிறது.

பூரண ஆதரவுடன் அவர்களோடு தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை நாங்கள் நிச்சயமாக செய்ய இருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0