உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பிரான்சில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
67 பார்வைகள்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் விதித்த தடையை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த தடை மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் தனியுரிமையையும் பாதிப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும் திரைப் பயன்பாட்டைக் குறைக்கவும் ஜூலை மாதத்தில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தால் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் மாதம் முதல் இந்தத் தடை அமுலுக்கு வரவிருந்தது.

எனினும், 15 வயதுக்குட்பட்டவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்வது, அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமையை விகிதாசாரமின்றிப் பாதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

அத்துடன், வயதுச் சரிபார்ப்பிற்காக அனைத்துப் பயனர்களின் தகவல்களையும் கோருவது தனியுரிமைப் பாதுகாப்புக்குப்; போதிய உத்தரவாதங்களை அளிக்கவில்லை என்றும் பிரான்ஸின் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் சுட்டிக்காட்டல்களைக் கவனத்தில் கொண்டு, புதிய சட்ட வரைவை விரைவாகத் தயாரிக்குமாறு பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுவுக்கு (Sébastien Lecornu) ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், 2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்துக்குள்; திருத்தப்பட்ட புதிய சட்டத்தை அமுல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது.

முன்னதாக, அவுஸ்திரேலியா கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகத் தடையை விதித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0