உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் காலாவதி!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
53 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளதால், நிலவும் போர் பதற்றங்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடனான நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டும் முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவத்தை “முழுமையான தாக்குதல்” நிலைக்கு மாற்றவுள்ளதாக அந்த நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை உடைக்க ஈரான் துல்லியமான இராணுவத் தாக்குதலை நடத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான தற்காலிக ஒப்பந்தத்தின் 60 நாள் கெடு முடிவடைந்துள்ளது.

ஹோர்;முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சையால் இந்த ஒப்பந்தம் முறிவடைந்ததுடன், தற்காலிக ஒப்பந்தத்தை நீடிக்கும் எண்ணம் அமெரிக்காவிற்கு இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஹோர்முஸ் நீரிணைப் பாதையை நிர்வகிப்பது குறித்து ஓமானுடன் ஈரான் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், ஓமான் இதில் இடையூறாக இருந்தால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகளாவிய மசகு எண்ணெய் நுகர்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றத்தால் பிரெண்ட் மசகுஎண்ணெய் விலை உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 89 டொலராக விற்பனையாகிறது.

இதனிடையே, பொப் அல்-மண்டெப் நீரிணை பகுதியில் ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களால் பிராந்தியப் போர் மேலும் விரிவடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0