இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்.!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் புத்திக ஹேவாவசம் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களினால் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக செயற்படும் சுரன்ஜித் வேவிட வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவர் ஆவார்.