உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொ*லை; ஐவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
54 பார்வைகள்

திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான ‘கஞ்சிபானை இம்ரான்’ என்பவரின் நெருங்கிய உறவினராகக் (சித்தப்பா) கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை நேற்று (17) திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பிரான்சில் தங்கியுள்ள திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான ‘கூடு அஞ்சு’ என்பவரே இந்த கொலையை வழிநடத்தி உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் காலை மற்றும் நண்பகல் வேளையில் இச்சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சமீபத்தில் இரத்மலானை பகுதியில் ‘கூடு அஞ்சு’ என்பவரின் நெருங்கிய சகாவொருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0