உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
84 பார்வைகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து உதவி பொலிஸ் மா அதிபரான சம்பத் குமார லியனகே விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில் இவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றதையடுத்து இவரை கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0