உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
81 பார்வைகள்

கற்பிட்டி, கந்தகுளிய அத்துருகுடாவ பகுதியில் கற்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கந்தகுளிய பகுதியைச் சேர்ந்த துஸ்மந்த ரோஹண என்ற 40 வயதுடைய மீனவரும், அவரது மகனான ரவீன் கனிஷ்க என்ற 6 வயதுச் சிறுவனும் என தெரியவந்துள்ளது.

தனது மகனுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0