உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தென்கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சி குறித்து ட்ரம்பின் அதிரடி உத்தரவு!

உலக செய்திகள் 3 நாட்கள் முன்
104 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே நடைபெறவிருந்த 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைக் “குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்பயிற்சிக்கான அதிகச் செலவு மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க தென்கொரியா மறுத்தமை ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கூட்டுப் பயிற்சிகள் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், இந்தப் பயிற்சிகளை முழுமையாக ரத்து செய்ய முடியாத நிலை உள்ளபோதிலும், இதில் அமெரிக்கா பங்கேற்பது குறித்துத் தாம் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தனக்கு உள்ள “மிகச் சிறந்த உறவை” அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்தப் பயிற்சிகள் வடகொரியாவிற்குத் தேவையற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்’ பயிற்சியில் சுமார் 18,000 தென்கொரிய இராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

வடகொரியாவின் இணையத் தாக்குதல்கள், ட்ரோன்கள் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் தடைகளை எதிர்கொள்ளும் வகையில் கணினி அடிப்படையிலான உருவகப்படுத்துதல் மூலம் இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.

பயிற்சிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை தொடங்கப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், ட்ரம்ப்பின் கருத்துக்கள் குறித்து உடனடி விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

தென்கொரியாவுடனான இராணுவப் பயிற்சிக் குறைப்பிற்கு வடகொரியாவுடனான ராஜதந்திர உறவு மட்டுமல்லாது, ஈரானின் அணுஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் இணைய தென்கொரியா மறுத்ததும் ஒரு காரணம் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சோதித்து வரும் வேளையிலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலிலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0