சட்டவிரோத மதுபான உற்பத்தி; மூவர் கைது.!
அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டாவ வீதி, பழைய சந்திப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 38 வயதுடைய வெல்மில்ல மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கைது செய்யப்பட்ட 30 வயதுடைய பெண் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 3,756 லீற்றர் கோடா – 20 பீப்பாய்கள், செப்புச் சுருள் ஒன்று, எரிவாயு சிலிண்டர் ஒன்று, கார் ஒன்று, முச்சக்கரவண்டி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று, சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.