22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யத் தீர்மானம்!
உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கமைய, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியின் கூட்டணிக் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் தீர்மானம்
இவ்விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ய தீர்மானம் | Legal Action Against Npp Govt
இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்ப ஒன்றை அமைத்துள்ளன.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்த இக்கட்சியினர், இது குறித்து அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கு ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுதல் ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.