பேருந்தின் சாரதியை தாக்க முற்பட்ட பெண் : வைரலாகும் காணொளி!
திவுலப்பிட்டிய நகரில் பேருந்து சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றிற்கு பின்னால் வந்த கார் ஒன்று, திடீரென பேருந்து மறித்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவரும் இரு ஆண்களும் வாளுடன் பேருந்து சாரதியை தாக்க முயன்றுள்ளனர்.
இச்சம்பவத்தை பேருந்திலிருந்த பயணி ஒருவர் முழுமையாகத் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்ததுடன், அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த திவுலப்பிட்டிய பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 18 வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.