உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
66 பார்வைகள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா கைப்பற்றப்பட்டதுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (14) பெம்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகமுவ பகுதியில் பெம்முல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 67 லீற்றரும் 500 மில்லிலீற்றரும் (90 போத்தல்கள்) கொண்ட சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,060 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடா ஆகியவற்றுடன் 37 வயதுடைய போகமுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, வீரக்கெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்குமுல்ல பகுதியிலும் பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 67 லீற்றரும் 500 மில்லிலீற்றரும் (90 போத்தல்கள்) கொண்ட சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் 1,160 லீற்றர் (07 பீப்பாய்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பான தொடர் விசாரணைகளும் மேலதிக சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0