இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்; ஐவர் உயிரிழப்பு.!
இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிச்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 என்ற அளவுகளில் மூன்று தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர் நில அதிர்வுகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. எனினும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்த பின்னர், சுனாமி எச்சரிக்கையை அந்த மையம் பின்னர் திரும்பப் பெற்றுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.