தேவிபுரம் பொதுச் சந்தையை திறப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மூலமாக மக்களின் கோரிக்கைக்கு அமைய தேவிபுரம் பொது சந்தை திறக்கப்படவுள்ளது.
இதற்காக அப்பகுதியில் சிரமதானப் பணிகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலனின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணிகளில் பங்கெடுத்தனர்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் மக்கள் நலனுக்கான பணிகள் தொடர்ந்து இடம்பெறும் என இதன் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.






