பெருந்தொகை பீடி இலைகள் கைப்பற்றல்.!
நுரைச்சோலை, பனியடி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1,464 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (13) வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விஜய மற்றும் நுரைச்சோலை பொலிஸார் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஆட்கள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றில் காணப்பட்ட 38 சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த 1,464 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.