இளம் பெண் ஒருவர் கொ*லை.!
கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடபாத பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) இரவு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.
பொல்ஹேன பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையில், கணவரால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு இக்கொ*லை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெஸ்பேவா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.