உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சட்டவிரோத சொத்துக் குவிப்பு; பெண் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
34 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு சொத்துக்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 14, நகலசம் வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் இச்சொத்துக்களைப் பெற்றுள்ளதாகக் பொலிஸ்மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இவ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் விபரங்களைச் சமர்ப்பித்ததை அடுத்து, சட்டவிரோதப் பணமாற்றத் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக அச்சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்களால் இதற்கான முடக்கக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில், ஜா-எல பகுதியில் அமைந்த 14 இலட்சம் ரூபா பெறுமதியான 8.66 பேர்ச்சஸ் காணி, 6 வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த 59 இலட்சம் ரூபாய் பணம், கொழும்பு 14 பகுதியில் அமைந்துள்ள 225 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடு, அதே பகுதியில் அமைந்துள்ள 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 அறையைக் கொண்ட அடுக்குமாடி வீடு மற்றும் 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீடு கொண்ட காணி ஆகியன அடங்குகின்றன.

இச்சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டவை என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பெண் சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0