உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்; பேசித் தீர்வு காணப்பட்டதாக ஆதம்பாவா எம்.பி அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
35 பார்வைகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இஸ்லாமியப் பெண்கள் ஸ்காப் (ஹிஜாப்) அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பான இனவாதச் செயற்பாடுகளுக்குத் தாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை ‘யங் பேட்ஸ்’ ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (13) இரவு கல்முனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கல்முனை ஆதார வைத்தியசாலையில் எழுந்த இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை தொடர்பில் சுகாதார பிரதி அமைச்சர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுடன் உடனடியாகப் பேசி நடவடிக்கை எடுத்தேன்.

அதனடிப்படையில், தற்போது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் எவ்வித அசௌகரியங்களுமின்றித் தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர்.

பிரச்சினைக்குச் சுமூகத் தீர்வு காணப்பட்டதைச் சகித்துக்கொள்ள முடியாத சிலர், நாடாளுமன்ற உறுப்பினர் எதுவுமே செய்யவில்லை எனக் கூறி சமூக வலைத்தளங்களில் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளை மறந்து விட்டுக்கொடுப்புடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என அவர் மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0