உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யால தேசிய பூங்காவில் அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
102 பார்வைகள்

யால தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொனராகலை – தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவினர், நேற்று(11) யால காப்பகத்தில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டின் போது இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், திஸ்ஸமஹாராம – எல்லகல இடதுகரை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பெருமளவிலான மான் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0