கடற்படைத் தளபதியை சந்தித்த பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர்.!
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் முஹம்மத் தல்ஹா பதர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை இன்று (12) உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு கேர்னல் முஹம்மத் தல்ஹா பதர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

