உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
81 பார்வைகள்

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் இருந்து அறவிடப்பட்ட 5 இலட்சத்து 24 ஆயிரத்து 290 ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய புகாரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்கு வரும் மக்களிடம் இருந்து முறைப்பாட்டுப் பிரதிகள், ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சைரன் குழாய்களுக்கான கட்டணங்களை வாங்கியபோது, அதற்கான உரிய பற்றுச்சீட்டுகளை வழங்காமல் இந்த பணத்தை அவர் கையாடல் செய்துள்ளமை பொலிஸ் உள்நாட்டு கணக்காய்வுப் பிரிவின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு பற்றி அறிந்ததும், கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டார ஹக்மனவின் உத்தரவின்பேரில், கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் உடனடியாக விசாரணை நடத்தி அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக வலப்பனை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது, முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் வெறும் ரூபாய் 5,010 மட்டுமே பொலிஸ் பெட்டகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பதிநாக்க மற்றும் உயரதிகாரிகளின் மேற்பார்வையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0