யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!
குருநாகல் – அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபராவார்.
தனது விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட முயற்சித்த போதே, அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.