அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!
தங்காலை, குடாவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தங்காலை பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.