ஈரானின் அச்சுறுத்தலால் துருக்கியில் இருந்து பிரித்தானியாவிற்கு இரகசியமாக பயணித்த ட்ரம்ப்!
ஈரானிடமிருந்து எழுந்த தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் துருக்கியிலிருந்து பிரித்தானியாவிற்கு இரகசியமாக இராணுவ வானூர்தி ஒன்றில் பயணம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், ஜனாதிபதி வழக்கம்போல பழைய ‘எயர் போர்ஸ் ஒன்’ (Air Force One) வானூர்தியில் ஏறுவது போன்று ஊடகங்களுக்குக் காண்பிக்கப்பட்டன.
இருந்த போதிலும், அவர் பின்னர் விமான நிலையத்தின் உணவு விநியோக ஊர்தி (catering truck) மூலம் இரகசியமாக வானூர்திபடைக்குச் சொந்தமான சிறிய ரக வானூர்திக்கு மாறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித் தாள் குறிப்பிட்டுள்ளது