உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அழைப்பு வந்தால் 6 தமிழ்க் கட்சிகளுடன் இணைவது குறித்து தமிழ்த்தேசிய பேரவை தீர்மானிக்கும்!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
55 பார்வைகள்

ஆறு தமிழ், முஸ்லீம் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் தமிழ்த்தேசிய பேரவை   மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா என முடிவு எடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்பு  ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

தமிழ் கட்சிகள் (ஆறு கட்சிகள் சேர்ந்து) இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கிறதா?

போன கிழமை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்திலே என்னை கண்டு ‘பேசலாமா?’ என்று கேட்டு, “நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த முயற்சியிலே நானும் — அதாவது தமிழ் தேசிய பேரவையும் — வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்” என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார்.

அந்த ஆறு கட்சிகளுக்கும் தான் இந்த விடயத்தைச் சொல்லியிருப்பதாகவும், அந்த வகையிலே வந்து எவருக்கும் தமிழ் தேசிய பேரவையை இணைத்துக் கொள்வதிலே எதிர்ப்பு இல்லை என்றும், ஆகவே நாங்கள் அதிலே எங்களுடைய அமைப்பு சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவிச்சிருந்தார்.

அந்த இடத்திலே திரு. ராதாகிருஷ்ணன் அவர்களும் — பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்களும் — கிட்ட இருந்த இடத்தில அவரையும் கூப்பிட்டு, “நான் கஜேந்திரனிடம் அவருடைய கட்சியை இந்த ஆறு கட்சிகளுடைய முயற்சியிலே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்” என்ற கருத்தை சொல்லியிருந்தார்.

அப்பொழுது நாங்கள் சொன்னது என்னவென்றால், எங்களுக்கு அந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய குழுவுக்கு அதை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கும்.

அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு எடுப்பதற்கு வந்து, நாங்கள் அந்த முயற்சி சம்பந்தமாக எங்களுக்கு தெளிவில்லை. ஏனென்றால் நாங்கள் அதிலே இதுவரைக்கும் அது சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பொறுத்தவரையிலே வந்து அந்த தெளிவு எங்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆகவே நாங்கள் முதல் அதிலே கலந்து கொள்வதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னம், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைகின்ற இடத்தில் வந்து நாங்கள் அது சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கலாம் என்பதை நாங்கள் அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0