உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யானைகளின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன் இயக்கிய சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
119 பார்வைகள்

வடமேற்கு வனஜீவராசி வலயத்திற்குட்பட்ட கல்கமுவ – கசிகோட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள யானைகள் நடமாடும் பாதையில், யானைகளின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன் கமராவை இயக்கிய சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் வழக்கு சான்றுகளான ட்ரோன் கமரா ஆகியவை மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கு விசாரணை எதிர்கால திகதியொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யானைகள் வீதியைக் கடக்கும் நேரங்களில், கசிகோட்ட யானை சுரங்கப்பாதை (Underpass) அருகே யானைகளைப் பார்ப்பதற்கும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பெருந்திரளான மக்கள் கூடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் யானைகள் மக்களைத் துரத்தக்கூடும் என்பதால், உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனுமதியின்றி ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தும் நபர்களைக் கைது செய்ய வனஜீவராசிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதுடன், அத்தகைய நபர்கள் ட்ரோன் கமராக்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0