பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து.!
மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, புத்தல – மஹகொடய பகுதியில் இன்று அதிகாலை 3.55 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது பேருந்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.