உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

செயற்கை நுண்ணறிவு கருவிகள் குறித்து விசேட பயிற்சியளிப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
48 பார்வைகள்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான விசேட பயிற்சி நிகழ்வு நேற்றைய தினம் (10) நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், அதன் நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் நவீன AI கருவிகளை அன்றாட நிர்வாகப் பணிகளில் திறம்பட பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் டிஜிட்டல் திறன்களை (Digital Skills) காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துதல், பணித்திறனை அதிகரித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மருத்துவமனை நிர்வாகத்தில் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான அறிவை வழங்குதல் ஆகிய பிரதான நோக்கங்களுடன் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ‘நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்குவதன் மூலமே சுகாதார சேவையின் வேகத்தையும் தரத்தையும் மேலும் உயர்த்த முடியும் என வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் றிபாஸ் குறிப்பிட்டார்.

இப்பயிற்சி நிகழ்வில் வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவின் நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளையும் அறிவையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0