உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசுக்கு சொந்தமான பங்களாக்களை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
55 பார்வைகள்

கொழும்பில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச வாசஸ்தலங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, குறித்த பங்களாக்களை பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்திய மொத்தம் 24 பங்களாக்களை அரச – தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பயன்படுத்திய பங்களாக்களும், முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய சில பங்களாக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.

குறித்த அரச கட்டடங்களை உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இம் மாதம் 25ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத சொத்துக்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருமானம் ஈட்டுவதுடன், அவற்றை முறையாகப் பயன்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0