நுவரெலியாவில் ஆர்வத்துடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்ட நிலையில் பாரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றினர்.
குறிப்பாக ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பரீட்சை இடம்பெறுகின்றது.
எவ்வித தடையின்றி மிகவும் ஆர்வத்துடன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரீட்சைக்கு தோன்றினர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை சற்று ஓய்ந்த போதிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
மேலும் சாமிமலை பகுதியில் இருந்தும் ஹட்டன் பகுதியில் இருந்து காலை வேளையில் சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்துகள் இன்று சேவையில் இல்லாத நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பரீட்சைக்கு தோற்ற முச்சக்கரவண்டிகள் மூலம் பெருந்தொகை பணத்தை செலவு சென்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நாளை முதல் சாமிமலை – மஸ்கெலியா, ஹட்டன் – மஸ்கெலியா, நல்லதண்ணி – மஸ்கெலியா, மரே – மஸ்கெலியா, காட்மோர் – மஸ்கெலியா ஆகிய சாலையில் நாளாந்தம் சேவையில் ஈடுபட்டு வந்த பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.