உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சீரற்ற காலநிலை; 8 பேர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
144 பார்வைகள்

இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும், உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்கியுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள், மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் மண்மேடுகள் சரிந்தமை போன்ற காரணங்களால் தடைப்பட்டிருந்த முக்கிய போக்குவரத்துப் பாதைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.

எனினும், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி (டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

களனி மற்றும் களு கங்கை ஆற்றுப் படுகைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆறுகளின் நீர்மட்டம் சீரான நிலையை எட்டியுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீரியல் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார தெரிவித்தார்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் மலைப்பாங்கான பிராந்தியங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுகின்றது. அதற்கமைய, கண்டி (கங்கா இஹல கோரளை, உடுதும்பர, பச்பாகே கோரளை), கேகாலை (எட்டியாந்தோட்டை), நுவரெலியா (அம்பகமுவ, நோர்வூட்) ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலைச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி இன்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர்…

102 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற…

103 0 0
இலங்கை செய்திகள்

தேசிய நலன்களை முன்னிறுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித் வலியுறுத்தல்

பாரம்பரிய அணிசேரா கொள்கையிலிருந்து விடுபட்டு, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான இணக்கப்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும்…

107 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

112 0 0