உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
22 பார்வைகள்

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன்   தலைமையில் இடம்பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்   பாராளுமன்ற உறுப்பினர்களான  ரிசாத் பதியுதீன் , ஜெகதீஸ்வரன்  மற்றும்  வட  மாகாண கல்விப்பணிப்பாளர், வலய கல்விப்பணிப்பாளர், பாடசாலையின் அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை அதிபரை மாற்றக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து கடந்த  மூன்று தினங்களாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் மீண்டும் வழமைபோன்று பாடசாலைக்கு செல்வதற்கு பெற்றோர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0
இலங்கை செய்திகள்

பழுதடைந்த பேருந்தால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் தாமதம்!

பருத்திதுறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் போக்கறுப்பு 762 வழி சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரவு தங்கல் பேருந்து பருத்திதுறையில் இருந்து மாலை…

49 0 0