உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்யப்படும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
107 பார்வைகள்

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன் அவர்களுடன் இணைந்து பருத்தித்துறை முனைப்பகுதிக்கு நேரில் கள ஆய்வை மேற்கொண்டோம்.

இந்தப் பகுதி இயற்கை எழில், கடற்கரைச் சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கக்கூடிய தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால், வடக்கு மாகாணத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உருவெடுக்கும் மிகுந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது.

இதனை முன்னிட்டு, சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பருத்தித்துறை முனைப்பகுதியை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையும் விரைவில் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

வடக்கின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.

இந்த கள ஆய்வின் போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், மற்றும் தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர் மற்றும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த வட மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன்,
விரைவில் யாழ்ப்பாணம் வரவுள்ள சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் நேரடியாக முனை பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவரது ஆலோசனைப்படி முனை பகுதியில் அதிக மக்கள் கூடும் இடங்களான முனை வெளிச்சவீடு என்பன விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0