பழுதடைந்த பேருந்தால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் தாமதம்!
பருத்திதுறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் போக்கறுப்பு 762 வழி சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரவு தங்கல் பேருந்து
பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில் தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.
இந்த சேவையில் ஈடுபடும் பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து வருகின்றனர்.
இன்று (27.07.2026)காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து பருத்தித்துறை நோக்கி வரும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில் பழுதடைந்துதினால் இதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45 நிமிடங்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பருத்தித்துறையில் உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்க உட்பட அரச உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல் சேவைக்காக ஈடுபடும் பேருந்து பழைய பேருந்து வாக இருப்பதினால் அடிக்கடி காலை நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள் கேவிலிலிருந்து பருத்தித்துறை நோக்கி வருகின்ற பேருந்து தாமதமாக வருவதனால் பருத்தித் துறையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்கின்ற பேருந்து சேவையை தினமும் தவற விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பல தடங்க நிலையில் பிறிதொரு பேருந்து மூலம் ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது