உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

பழுதடைந்த பேருந்தால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் தாமதம்!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
49 பார்வைகள்

பருத்திதுறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் போக்கறுப்பு 762 வழி சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரவு தங்கல் பேருந்து
பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில் தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.

இந்த சேவையில் ஈடுபடும் பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து வருகின்றனர்.

இன்று  (27.07.2026)காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து பருத்தித்துறை நோக்கி வரும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில் பழுதடைந்துதினால் இதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45 நிமிடங்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பருத்தித்துறையில் உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்க உட்பட அரச உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல்  சேவைக்காக ஈடுபடும் பேருந்து பழைய பேருந்து வாக இருப்பதினால் அடிக்கடி காலை நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.

இதேவேளை  பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள்  கேவிலிலிருந்து பருத்தித்துறை நோக்கி வருகின்ற பேருந்து தாமதமாக வருவதனால்  பருத்தித் துறையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்கின்ற பேருந்து சேவையை தினமும் தவற விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்  பல்கலைக்கழக மாணவர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பல தடங்க நிலையில் பிறிதொரு பேருந்து மூலம் ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

21 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

63 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

44 0 0