உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

சாவகச்சேரி நகர சபைக்கு புதிய உப தவிசாளர் தெரிவு நாளை!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
80 பார்வைகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையிலிருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநர் வௌியிட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் தீர்ப்பு
எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

எனினும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் வெற்றிடத்தை நிரப்ப உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கூட்டியுள்ள சபையின் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை.

அதனால் சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை நடைபெற்று புதிய உப தவிசாளர் நளையே பதவியேற்பார் எனத் தெரிகின்றது.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் நடத்தை தொடர்பில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை ஆளுநரால் வெறிதாக்கப்பட்டது.

இது தொடர்பான மாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு தடை கோரி முன்னாள் உப தவிசாளர் ஞா.கிஷோர் சார்பில் கடந்த 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட் மனு இன்றைய தினமும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது தமது தரப்பு ஆட்சேபனையை மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் நீண்ட சமர்ப்பணமாக சபையிக் தொடர்ச்சியாக முன்வைத்தார்.

வாத இறுதியில் இந்த வழக்குக்கான தீர்ப்புக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாளையை தெரிவுக்கு இடைக்காலத் தடை ஏதும் நீதிமன்றம் பிறப்பிக்காத காரணத்தால் நாளை சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தேர்வு இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

22 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0