உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டல்.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
96 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலத்தை புதிதாக அமைப்பதற்கு நேற்று(14) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பனைநின்றான் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் 4,446,871.90 ரூபாய் பெறுமதியில் அப்பாலத்தினை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் பிரதான வீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த வீதியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று கடந்த 2025.07.19ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற வன்னி மாவட் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த வீதி மற்றும் பாலத்தினைச் சீரமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

அதற்கமைய புதுக்குடியிருப்பு பிரதேசசபையூடாக குறித்த பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியின் ஒருபகுதியைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்தொடர்ச்சியாக குறித்த வீதியில் அமைந்துள்ள பனைநின்றான் பாலத்தினையும் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கு அமைவாக 4,446,871.90 ரூபாய் பெறுமதியில் பனைநின்றான் பாலத்தினை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித் பனைநின்றான் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது நேற்று இடம்பெற்றது.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன் ஆகியோருடன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் அரச உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர்…

45 0 0
இலங்கை செய்திகள்

அரச நிறுவனங்கள் மீது பாய்ந்த டெங்கு ஒழிப்பு சட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு…

38 0 0
இலங்கை செய்திகள்

விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் ஆரம்பிப்பு.!

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மனோன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்…

45 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி…

57 0 0