உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

இராணுவத்தினரின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
90 பார்வைகள்

நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்ற நிலையைக் கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவோரியன் பகுதியில் இன்று (15) விசேட நுளம்பு களத்தடுப்பு மற்றும் வீட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடித் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்தத் தீவிர கூட்டுத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இன்றைய கள நடவடிக்கையின் போது, வொலிவோரியன் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெற்று நிலங்கள் அனைத்தும் அதிகாரிகளினால் அணு அணுவாகப் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கியிருந்த இடங்கள் மற்றும் டெங்கு பரவலுக்கு வழிவகுக்கும் அபாயகரமான சூழல்கள் பல அடையாளம் காணப்பட்டன.

அடையாளம் காணப்பட்ட நுளம்புப் பெருக்க இடங்கள் அனைத்தும் வீட்டு உரிமையாளர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றப்பட்டு, சுற்றுப்புறச் சூழல் துப்புரவு செய்யப்பட்டது.

எதிர்காலத்தில் இவ்வாறான டெங்கு அபாய நிலைமைகள் மீண்டும் ஏற்படாதவாறு பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் சுற்றுப்புறத்தைப் பேணுவது தொடர்பான அத்தியாவசிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் இதன்போது அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

டெங்கு அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களையாவது ஒதுக்கி, தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை மிக அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் அரச உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர்…

45 0 0
இலங்கை செய்திகள்

அரச நிறுவனங்கள் மீது பாய்ந்த டெங்கு ஒழிப்பு சட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு…

38 0 0
இலங்கை செய்திகள்

விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் ஆரம்பிப்பு.!

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மனோன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்…

45 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி…

57 0 0