உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
161 பார்வைகள்

மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், முப்படையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த டெங்கு பரிசோதனை விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இன்றையதினம் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும். அறிவித்தல்களை மீறி டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு உடந்தையாக உள்ள உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் கடற்படை, இராணுவம், பொது சுகாதார பரிசோதகர் உள்ளடங்கிய குழுவினர் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கு ஏதுவாக காணப்படும் இடங்கள் குறித்து கண்காணித்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0