உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

போதைப்பொருட்களுடன் இருவர் அதிரடியாக கைது.!

இலங்கை செய்திகள் 22 மணி நேரம் முன்
85 பார்வைகள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 14 ஆம் திகதி மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் வைத்து இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முறையே 38 வயது 34 வயதுடைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஒருவரும், டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் ஆவர்.

அவர்களிடம் இருந்து முறையே 3,290 மில்லிகிராம் ஜஸ், 360 மில்லிகிராம் ஹேஸ் எனப்படும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நெடுங்காலமாக சட்டவிரோதமாக முறையில் இப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளையில் இந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று 15 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் அரச உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர்…

45 0 0
இலங்கை செய்திகள்

அரச நிறுவனங்கள் மீது பாய்ந்த டெங்கு ஒழிப்பு சட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு…

38 0 0
இலங்கை செய்திகள்

விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் ஆரம்பிப்பு.!

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மனோன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்…

45 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி…

57 0 0